News August 3, 2024
மகப்பேறு வார்டு உள்ளே செல்வதற்கு ஆதார் கட்டாயம்

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை கடத்தல் சம்பவத்தால் மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் “சீமான்ஸ் ” (மகப்பேறு வார்டில்) உள்ளே செல்வதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை கட்டாயம் என அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வேலூர் மக்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்.
Similar News
News December 17, 2025
வேலூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பாபு ரவிச்சந்திரன் பணியாற்றி வந்தார். அவரை மத்திய மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்து தமிழக ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் உத்தரவிட்டார். இதையடுத்து வேலூரில் இருந்து பாபு ரவிச்சந்திரன் விடுவிக்கப்பட்டார். அவர் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
News December 17, 2025
வேலூர்: இளைஞர் மர்ம சாவு!

பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி, எம்.சி.ரோடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் பாபு(33). இவர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் நண்பரின் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு உறங்கிய அவர், நேற்று(டிச.16) காலை எழும்பவில்லை. அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
News December 17, 2025
வேலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


