News August 3, 2024
மீனவரின் உடல் இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டது

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூலை 31ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நான்கு மீனவர்கள் கடலில் முழங்கினர். இதில் உயிரிழந்த இராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் இன்று(ஆக.03) அதிகாலை 4 மணியளவில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
Similar News
News August 5, 2025
ராமநாதபுரத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

எமனேஸ்வரம், துறைமுகம் (ராமேஸ்வரம்), பாம்பன், திருப்புல்லாணி, திருஉத்திரகோச மங்கை, பேரையூர், இளம்செம்பூர், எஸ்பி பட்டினம் சார்பு ஆய்வாளர் காவல் நிலையங்கள், ஆய்வாளர் காவல் நிலையங்களாக தர நிலை உயர்த்தி கவர்னர் உத்தரம்படி அரசின் கூடுதல் தலைமை செயல தீரஜ்குமார் நேற்று ( 04.8.2025) அரசாணை பிறப்பித்துள்ளார்.
News August 5, 2025
ராமநாதபுரம்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் அரசு நிலத்தில் வசிப்போர் (அ) நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் (அ) வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க
News August 4, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.