News August 3, 2024

ஹமாஸ் தலைவர் உடல் கத்தாரில் அடக்கம்

image

ஈரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்டது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் புதன்கிழமை அவர் கொல்லப்பட்டார். இதையடுத்து அவர் வசித்து வந்த கத்தாருக்கு உடல் கொண்டு வரப்பட்டு, டோஹா அருகே லூசாயில் உள்ள மிகப்பெரிய மசூதியில் வைத்து சிறப்புத்தொழுகை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மரியாதை செலுத்தியபிறகு, உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Similar News

News October 18, 2025

2035-ல் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்!

image

இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் (Space Station) கனவு வரும் 2035-ல் நனவாகும் என ISRO தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த விண்வெளி நிலையத்திற்கான தொடக்க தொகுதிகள் (Modules) 2027-ல் விண்ணில் நிறுவப்படும் எனவும் கூறினார். மேலும், விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா தன்னிறைவான இடத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இத்துடன், ககன்யான்- 3 திட்டமும் தயாராகி வருவதாக கூறினார்.

News October 18, 2025

₹1,000 உடனடியாக வருகிறது.. தமிழக அரசு அறிவிப்பு

image

திறனாய்வுத் தேர்வில்(TRUST) தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நவ.15-ம் தேதிக்குள் ₹1,000 வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு ₹1.44 கோடி ஒதுக்கியுள்ளது. ஊரக பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் டிசம்பரில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ₹1,000 வழங்கப்படுகிறது.

News October 18, 2025

வீடு, நில பட்டாவில் கவனிக்க வேண்டியவை!

image

பட்டாவில் உள்ள பிழைகளை திருத்த பலரும் அலைந்து திரிகின்றனர். *உங்கள் சொத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றத்துக்கு பின் சர்வே எண், உட்பிரிவு எண் அதில் சரியாக உள்ளதா?
*மனையின் பரப்பளவு சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா?
*பத்திரத்தில், பழைய பட்டாவில் உள்ள அளவுகள் இத்துடன் பொருந்துகின்றனவா?
*மனையின் உரிமையாளர் பெயர், தந்தை (அ) கணவர் பெயர் சரியாக இடம் பெற்றுள்ளதா?
*தாலுகா, கிராம பெயர் விவரங்கள் சரியாக உள்ளனவா?

error: Content is protected !!