News August 3, 2024
கர்ப்பிணி சிறுமி தற்கொலை; கணவர் மீது ‘போக்சோ’

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (24). கரும்பு கூலித் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார், விசாரணை நடத்தி அவரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.
Similar News
News January 15, 2026
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொங்கல் விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் ஆகியவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் உடன் இருந்தனர்.
News January 14, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூடுதல் எண்ணாக 100 ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
கள்ளக்குறிச்சி:தை முதல் அன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

கள்ளக்குறிச்சி மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
▶அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,
▶செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,
▶பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,
▶மகரூர் கைலாசநாதர் கோயில்.
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க


