News August 3, 2024

காஞ்சிபுரம் ஊரக திட்ட இயக்குநர் மாற்றம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், நேற்று (ஆகஸ்ட் 2) திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநரான ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிட மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.

Similar News

News October 31, 2025

காஞ்சி: 48 மணி நேரத்தில் இழந்த பணத்தை மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் வாங்குவது, Part Time Job எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். எனவே, காஞ்சியில் உள்ள மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) <>இந்த லிங்க் <<>>மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை மீட்கலாம். ஷேர்!

News October 31, 2025

காஞ்சி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

காஞ்சிபுரத்தில் இன்று குறைதீர்க்கும் கூட்டம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் & சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (அக்.31) மாலை 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!