News August 3, 2024
ஈரோட்டில் 31 பேருக்கு பணி நியமன ஆணை

ஈரோடு அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்று வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியருக்கு நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி, 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Similar News
News October 16, 2025
ஈரோட்டில் வெளுக்கப்போகும் மழை!

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News October 16, 2025
ஈரோட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (அக்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, அம்மாப்பேட்டை, பூதப்பாடி, ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சித்தார், கேசரிமங்கலம், குட்டை முனியப்பன் கோவில், சிங்கம்பேட்டை, கல்பாவி, காடப்பநல்லூர், சின்னப்பள்ளம், குறிச்சி, ஆனந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News October 16, 2025
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் இன்று (16/10/25) ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, அருள்நெறி திருப்பணி மன்றம் நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளி, வைராபாளையம் (ஈரோடு மாநகராட்சி மண்டலம்-1), வாசவி சமூகக் கூடம், பவானி (பவானி நகராட்சி), காமாட்சியம்மன் மண்டபம். மேட்டுப்புதூர் (சத்தி நகராட்சி), மயில் மஹால்-திங்களுர்(பெருந்துறை வட்டாரம்) இடங்களில் நடைபெறும்.