News August 3, 2024

ஹமாஸ் தலைவர் கொலையில் குழப்பம்

image

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது வெடிகுண்டு தாக்குதலிலா, ராக்கெட் தாக்குதலிலா என்பதில் குழப்பம் நிலவுகிறது. டெஹ்ரானில் அவர் தங்கியிருந்தது விருந்தினர் மாளிகை என்றும், ஒரு வாரத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைத்து, அதை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் அமெரிக்கா தெரிவித்தது. ஈரான் தரப்பிலோ, ராக்கெட் வீச்சில் பலியானதாக கூறப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் நிலவுகிறது.

Similar News

News December 18, 2025

பட்டா தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

image

குறிப்பிட்ட நிலம், வீடு, வீட்டுமனை ஒருவருக்கு சொந்தமானது என்பதற்கான அரசு ஆவணமே பட்டா. அது தொலைந்து விட்டால், முதலில் தாசில்தாரிடம் புகார் அளிக்க வேண்டும். பின்னர் நகல் பட்டா பெறுவதற்கான விண்ணப்பத்தில் பட்டா எண், அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து தாசில்தார் ஆபிசில் சமர்பிக்க வேண்டும். அது, VAO & வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பிறகு, ஒப்புதல் பெறப்பட்டு, நகல் பட்டா அளிக்கப்படும்.

News December 18, 2025

கலை நாயகன் காலமானார்.. கண்ணீருடன் குவியும் இரங்கல்

image

இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பியான ராம் சுதர் (100) வயது மூப்பு காரணமாக காலமானார். நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை, குஜராத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலை (வல்லபாய் படேல்), பெங்களூருவில் அமைந்துள்ள செழுமைக்கான சிலை (கெம்பேகவுடா) போன்றவை இவரின் கைவண்ணத்தில் உருவானவை. 2016-ல் பத்ம பூஷன் விருது பெற்ற அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 18, 2025

பாதியிலேயே அனுப்பப்படும் கர்ப்பிணிகள், குழந்தைகள்

image

விஜய்யின் பரப்புரை கூட்டத்திற்கு கர்ப்பிணிகள், சிறுவர்கள், குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதையெல்லாம் மீறி ஈரோடு பரப்புரை திடலுக்கு வந்த கர்ப்பிணிகள், குழந்தைகளை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார், தவெக நிர்வாகிகள் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். கரூரில் விஜய்யை பார்க்க சென்று உயிரிழந்தவர்களில் 9 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!