News August 3, 2024
பதக்க வேட்டையை தொடர்வாரா மனுபாக்கர்?

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெற உள்ள 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் இறுதிப்போட்டியில் மனுபாக்கர், தனது 3ஆவது பதக்கத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தனி நபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்று, ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
Similar News
News September 17, 2025
ஜெயிலர் 2 படத்தின் டபுள் அப்டேட்

உண்மையிலேயே ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க தான் ஆசைப்பட்டேன், ஆனால் அது நடக்கவில்லை என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள நெல்சன், இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும், இதற்கு மேல் சொல்லி ஹைப் ஏற்ற விரும்பவில்லை என கூறியுள்ளார். சமீபத்தில் ‘கூலி’ படம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
News September 17, 2025
POSH சட்டம் அரசியல் கட்சிகளுக்கு பொருந்தாது: SC

பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடை சட்டத்தை (POSH), அரசியல் கட்சிகளில் உள்ள பெண்களுக்கும் பொருந்துமாறு உத்தரவு பிறப்பிக்க கோரி SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சம்பளம் இல்லாமல் விருப்பத்தின் பேரில் சேரும் அரசியல் கட்சியை எப்படி பணியிடமாக கருத முடியும் என்று SC கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் POSH சட்டம் அரசியல் கட்சிகளுக்கு பொருந்தாது என கூறி தள்ளுபடி செய்துள்ளது.
News September 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க