News August 3, 2024
ஜோலார்பேட்டை அருகே விவசாயிகளுக்கு பயிற்சி

ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூரில் வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்தான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி தலைமை தாங்கி ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வேளாண்மை குறித்து விளக்கினார். அதைத் தொடர்ந்து வேர்கடலை நிலங்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
Similar News
News August 22, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

“உங்களுடன் ஸ்டாலின்” இரண்டாவது கட்ட முகாம் நாளை (ஆகஸ்ட் 22) திருப்பத்தூர் நகராட்சி வார்டுகள் 11, 12, 13, வாணியம்பாடி நகராட்சி வார்டுகள் 16, 17, மற்றும் குரிசிலாப்பட்டு, கோணப்பட்டு, புத்தகரம், சுந்தரம்பள்ளி, சோமலாபுரம், சத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக மனு அளிக்கலாம்.
News August 21, 2025
இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News August 21, 2025
BREAKING: திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது

அம்பலூர் அடுத்த சங்கராபுரம் பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வருவதாக கோட்டாட்சியர் அஜிதா பேகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்று (ஆக.21) சங்கராபுரம் பகுதியில் கோட்டாட்சியர் சோதனை மேற்கொண்ட போது அங்கு அணுமுத்து என்பவர் வெறும் +2 மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை காவல்துறையினரிடம் கோட்டாச்சியர் ஒப்படைத்தார்.