News August 3, 2024
நீலகிரி பெண் செவிலியருக்கு குவியும் பாராட்டு

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு பகுதியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக எதிர் திசையில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பெண் செவிலியர் சபீனா என்பவர் ராணுவத்தினர் அமைத்த ஜிப்லைனில் தொங்கியபடி அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார். இவரின் செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Similar News
News August 13, 2025
ஆட்சியர் கூட்டரங்கில் சட்ட விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து தமிழக அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News August 13, 2025
நீலகிரி: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளுக்கு வரவேற்பு

நீலகிரி: வாழைத் தோட்டம் GRG நினைவு மேல்நிலைப் பள்ளியில் உதகை அரிமா சங்கம் சார்பில் விண்வெளி அறிவியல் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று(ஆக.12) நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ( இஸ்ரோ ) முன்னாள் விஞ்ஞானிகள் டாக்டர் சுரேந்திர பால் , டாக்டர் சுந்தரமூர்த்தி , டாக்டர் எச் .போஜராஜ் , டாக்டர் நகுலன் ஜோகி ஆகியோர்களை பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் வரவேற்றார்.
News August 13, 2025
நீலகிரி: டிகிரி வேண்டாம்.., உடனே அரசு வேலை! APPLY

நீலகிரி மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Process assistant பணிக்கு ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <