News August 2, 2024

சென்னையில் இரவு மழை பெய்யும்

image

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக கூடிய இந்த மேகங்கள், வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னை நகருக்கு மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News October 16, 2025

அங்கீகாரம் இல்லாத ORS-க்கு தடை!

image

WHO அங்கீகாரம் இல்லாத ORS தயாரிப்புகளுக்கு முழுமையாக தடை விதித்து FSSAI உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல பிராண்டுகள், குளுக்கோஸ் இல்லாத பானங்களை ORS எனக் கூறி போலியாக விற்று வந்ததால், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. WHO-வின் படி, 6 ஸ்பூன் சர்க்கரை, 1/2 ஸ்பூன் உப்பு, ஒரு லிட்டர் சுத்தமான நீர் மட்டுமே கலவையில் இருக்க வேண்டும். அதிக சர்க்கரை அல்லது உப்பு, பழப் பொடிகள் சேர்க்கக்கூடாது.

News October 16, 2025

ஊராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு

image

2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜன.5 உடன் நிறைவுற்றது. இவ்வாறு பதவிக்காலம் நிறைவடைந்த 28 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 2026, ஜன.5 வரை நீட்டிப்பு செய்வதற்கான சட்ட முன் வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் அறிமுகம் செய்தார். இது நாளை நிறைவேற்றப்படவுள்ளது.

News October 16, 2025

இந்தியாவின் டாப்-7 கோடீஸ்வர கோயில்கள்

image

இந்தியாவில் எண்ணற்ற ஆன்மிக தலங்கள் உள்ளன. இதில், நிகர மதிப்பு, ஆண்டு வருவாய் அடிப்படையில் டாப்பில் இருக்கும் கோயில்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? விவரங்களை SWIPE செய்து பார்ப்பதோடு, இந்த கோயில்களில் நீங்கள் தரிசனம் செய்திருக்கிறீர்களா எனவும் கமெண்ட் செய்யவும்.

error: Content is protected !!