News August 2, 2024

நாகையில் தேசிய கொடி பறக்குமா!!!

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டு 100 அடி உயரத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டு முன்னாள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிலையில் தேசியக்கொடி சேதமடைந்ததால் இறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. வரும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி பறக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News

News November 2, 2025

நாகை: பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை

image

நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிசேகம் நாளை 3ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும், நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 8ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

நாகை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

நாகை மக்களே, விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்து Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 2, 2025

நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நாகை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!