News August 2, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், நவீன முறை சலவையகம் அமைக்க தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
பெரம்பலூர் மாவட்டம்- ஓர் பார்வை

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
▶️ மொத்த மக்கள் தொகை – 5.65 லட்சம்
▶️ ஆண்கள் – 2.82லட்சம்
▶️ பெண்கள்- 2.83 லட்சம்
▶️ படிப்பறிவு – 83.39%
▶️ மொத்த பரப்பளவு – 1,756 சதுர கி.மீ. SHARE NOW!
News December 26, 2025
பெரம்பலூர்: தீப்பிடித்து எரிந்த புளியமரம்

பெரம்பலூர் மாவட்டம், இரூரில் இருந்து கூத்தனூர் செல்லும் சாலையின் ஓரத்திலிருந்த புளியமரம் ஒன்று நேற்று முன்தினம் இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
News December 26, 2025
பெரம்பலூருக்கு கிடைத்த புதிய சிறப்பு

“தமிழ்நாடு மாதிரி பள்ளிகளைப் போல, பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை மையப் பள்ளியாகக் கொண்டு சுற்று வட்டாரங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் +2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை தோறும் ஜேஇஇ, நீட், சியூஇடி தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.” என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.


