News August 2, 2024
செப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல், விவசாயிகளிடம் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதன்படி, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ₹2,320 மற்றும் தமிழக அரசின் ஊக்கத்தொகை ₹130, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ₹2,300 உடன் தமிழக அரசின் ஊக்கத்தொகை ₹105 சேர்த்து வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். மத்திய அரசு அறிவித்த ஆதார விலையுடன் சேர்த்து தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது.
Similar News
News October 30, 2025
அறிமுக இயக்குநருடன் இணையும் விக்ரம்

‘வீர தீர சூரன்’ வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குநருடன் விக்ரம் இணைந்து பணியாற்றவுள்ளார். ஆமென் உள்ளிட்ட 3 குறும்படங்களை இயக்கி விருதுகளை குவித்த போடி கே.ராஜ்குமார் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ளது. முன்னதாக, விக்ரம் 63 படத்தை ‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்குவார் எனக் கூறப்பட்டது.
News October 30, 2025
கிரிக்கெட் களத்தில் மடிந்த வீரர்கள்…

17 வயதான ஆஸ்திரேலிய வீரர் பென் ஆஸ்டின் வலை பயிற்சியின் போது பந்து தாக்கி உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்துவீச்சாளர்களின் பவுன்சர், பீல்டிங்கின் போது தலை, மார்பு பகுதியில் பந்து தாக்கி பல வீரர்கள் களத்தில் மடிந்துள்ளனர். லட்சியத்திற்காக பேட்டை பிடித்த பலரது வாழ்க்கை சிறிய பந்தினால் முடிந்துள்ளது. பென் ஆஸ்டின் போல, உயிரிழந்த வீரர்களின் போட்டோக்களை மேலே SWIPE செய்து பார்க்கவும்.
News October 30, 2025
மாதவிடாய் லீவுக்கு போட்டோ கேட்ட அவலம்!

மாதவிடாய் என்பதை உறுதிபடுத்த பெண்களிடம் போட்டோ கேட்ட சம்பவம் ஹரியானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. MD பல்கலை.,யில் கவர்னர் வந்த போது, மாதவிடாய் என்பதால் 3 பெண் தூய்மை பணியாளர்கள் விடுப்பு கேட்டுள்ளனர். அதற்கு சூப்பர்வைசர் போட்டோ கேட்டுள்ளார். சானிடரி நாப்கின் போட்டோ அனுப்பியும் லீவ் கொடுக்க அவர் மறுத்துள்ளார். இது சர்ச்சையான நிலையில், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்துள்ளார்.


