News August 2, 2024

ODI: தடுமாறும் இந்திய அணி

image

இலங்கைக்கு எதிரான முதல் ODI போட்டியில், இந்திய அணி தடுமாறி வருகிறது. முதலில் விளையாடிய SL, 230 ரன்கள் எடுத்தது. 231 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய IND வீரர்கள், முதலில் அதிரடி காட்டினாலும், மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக ரோஹித் 58, கில் 16, கோலி 24, வாஷிங்டன் சுந்தர் 5, ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். IND அணி தற்போதுவரை 27 ஓவர்களில் 134/5 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News

News February 4, 2026

3,979 பணியிடங்கள்.. உடனே APPLY பண்ணுங்க

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான யந்திரா இந்தியா லிமிடெட்டில் 3,979 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ பிரிவு பணிக்கு மாதம் ₹8,200, ஐடிஐ அல்லாத பிரிவுகளுக்கு ₹9,600 சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் மார்ச்.3-க்குள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

News February 4, 2026

இதய ஆரோக்கியத்திற்கு இதை பண்ணுங்க!

image

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இந்த 6 தினமும் பின்பற்ற டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். *காலையில் வெதுவெதுப்பான சூட்டில் தண்ணீர் குடிக்கவும் *சர்க்கரை குறைவான புரத உணவை காலையில் சாப்பிடவும் *5 நிமிடங்களுக்கு தியானம் செய்யவும் *சூரிய வெளிச்சத்தில் 15 நிமிடங்களுக்கு நடக்கவும் *30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடவும் *காலையில் எழுந்த பிறகு 30 நிமிடங்களுக்கு செல்போன் பயன்பாட்டை தவிர்க்கவும்.

News February 4, 2026

இதை நினைத்தால் கவலையாக இருக்கு: தோனி

image

இந்திய டி20 அணியை மிகவும் அபாயகரமான அணி என தோனி தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தேவையான அனுபவம், கடினமான சூழலுக்கு ஏற்ப விளையாடும் திறன் என அனைத்தும் இந்திய வீரர்களுக்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால், பனிப்பொழிவின் தாக்கத்தினால் போட்டிகளின் முடிவுகள் மாறுவதாக குறிப்பிட்ட அவர், அதுமட்டுமே தனக்கு கவலை தரக்கூடிய விஷயம் என பேசியுள்ளார்.

error: Content is protected !!