News August 2, 2024
இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் அமெரிக்க அணியுடன் மோதியது. இந்திய அணியின் தீரஜ் – அங்கிதா இணை, அமெரிக்காவின் கேசி – பிராடி இணையை எதிர்கொண்டது. இதில், 6-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவி பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
Similar News
News November 9, 2025
இதயக்கூட்டில் துளிர்த்த மிர்னாலினி ரவி

டிக்டாக்-ல் பிரபலமாகி திரையுலகில் தடம்பதித்த புதுவை பெண் மிர்னாலினி ரவி, தெலுங்கில் பிஸியான ஹீரோயினாக வலம் வருகிறார். இவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் SM-ல் வைரலாகி வருகின்றன. அவை தங்களது இதயக்கூட்டில் இடம்பிடித்துவிட்டதாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள், அவரை மீண்டும் கோலிவுட் பக்கம் அழைத்து வாருங்கள் என இயக்குநர்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர். புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்..
News November 9, 2025
வயிறு உப்புசம் பிரச்னைக்கு எளிய தீர்வு!

இரைப்பை பாதையில் காற்றால் நிரம்பும்போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்கு சீரகம், ஏலக்காய், சோம்பு, ஓமம் போன்றவற்றை சம அளவில் எடுத்து இடிக்கவும். அதன் பிறகு அரை டீஸ்பூன் பொடியை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, 10 நிமிட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வாருங்கள். இதனால் இரைப்பை பாதையில் உள்ள காற்று குறைந்து வயிற்று உப்புசம் பிரச்னை தீர்க்கப்படும்.
News November 9, 2025
ரயில்வேயில் 2,569 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

ரயில்வேயில் 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர் பணிகளுக்கு துறை சார்ந்த டிப்ளமோ படித்தவர்கள் விண்ணபிக்கலாம். உலோகவியல் உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி பட்டப்படிப்பு அவசியம். 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் நவ.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முதல் நிலை, 2-ம் நிலை என கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும்.


