News August 2, 2024
கடலூர் அமைச்சர் வேண்டுகோள்

கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, நினைவு அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டுமென வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேண்டுகோள் இன்று விடுத்துள்ளார்.
Similar News
News November 1, 2025
கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 1, 2025
கடலூர் அருகே ரயில்வே கேட் மூடல்

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஆலை ரோடு 147-வது எண் கொண்ட ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.1) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரையிலும், அதுபோல நவ.02-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்ட்டுள்ளனர்.
News November 1, 2025
கடலூர்: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

கடலூர் மாவட்டம், தட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் ப்ரீத்தி (18). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பிரீத்தி தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த காரணத்தால், அவரது தாய் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த ப்ரீத்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


