News August 2, 2024
புதுவை முதல்வருக்கு நெடுங்காடு எம்.எல்.ஏ வாழ்த்து

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேர்வோருக்கு மாதம் ரூ.1000/-, மீனவர் நிவாரணம் 8000/-, முதல்வரின் புதுமைப்பெண் உள்ளிட்ட புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் இன்று அறிவித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு, நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
Similar News
News October 19, 2025
புதுவை: வாய்க்காலில் விழுந்து முதியவர் பலி

நிரவியில் வாய்க்காலில் 60 வயது முதியவர் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அவர், நிரவி காமராஜர் நகர் ராமச்சந்திரன்(60), என்பதும் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 19, 2025
புதுவை: ஜிப்மரில் மாணவர் சேர்க்கை!

புதுவை, ஜிப்மரில் பி.எஸ்சி நர்சிங், ஹெல்த் சயின்ஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. இதற்காக கடந்த செ.22 வரை விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில், தேர்வான மாணவர்கள் தர வரிசை பட்டியலில் 3037 பேர் இடம் பெற்றுள்ளனர். இதன் கலந்தாய்வு வரும் வருகிற அக்.28ம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு பின் மாணவர்கள் பட்டியல் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்படும்.
News October 19, 2025
புதுவை மக்களே… கடைசி வாய்ப்பு!

தேசிய அறிவியல் அருங்காட்சியத்தில் கவுன்சிலின் (NCSM) கீழ் இயங்கும் விஸ்வேஸ்வரய்யா தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th போதுமானது, சம்பளம் ரூ.ரூ.38,908 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை 20.10.2025 தேதிக்குள் <