News August 2, 2024
தலைமுடி வேகமாக வளர…

தலைமுடி வேகமாக வளரவில்லை என சிலர் கவலையுடன் இருப்பர். இப்பிரச்னைக்கு தீர்வு காண மருத்துவ நிபுணர்கள் சில ஆலோசனைகளைப் பரிந்துரைக்கின்றனர். அதாவது, எண்ணெய்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதாகவும், ஆதலால் அதைக் கொண்டு, மசாஜ் செய்தால், முடி நன்கு வளரும் என கூறுகின்றனர். நல்ல தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி குளிப்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
Similar News
News October 19, 2025
டியூட், பைசன் 2 நாளில் இவ்ளோ கோடி வசூலா?

தீபாவளி விருந்தாக வெளியான 3 தமிழ் படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. டியூட் படம் முதல் நாளில் ₹22 கோடி வசூலித்த நிலையில், 2 நாள்களில் ₹45+ கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘பைசன்’ 2 நாள் முடிவில் ₹12+ கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாணின் டீசல் படம் 2 நாள்களில் ₹2+ கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
News October 19, 2025
படிப்பு செலவுக்கு ₹20 லட்சம் தரும் வங்கி; முற்றிலும் Free!

பள்ளி மாணவர்கள், இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM & வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ₹15,000-₹20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship வழங்குகிறது SBI. இதற்கு, குடும்ப ஆண்டு வருமானம், பள்ளி மாணவர்களுக்கு ₹3 லட்சம், மற்றவர்களுக்கு ₹6 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில் பயனடைய <
News October 19, 2025
தீபாவளி.. எந்த நேரத்தில் குளிக்க வேண்டும் தெரியுமா?

ஐப்பசி மாத அமாவாசையில் கொண்டாடப்படும் தீபாவளி என்றாலே எண்ணெய் குளியலும், பூஜையும் தான். அப்படி நாளை எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், பூஜை செய்ய உகந்த நேரம் எது என்ற சந்தேகம் பலருக்கும் எழும். அதிகாலை 4 மணி- 6 மணிக்குள் அல்லது காலை 9.10 மணி முதல் 10.20 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பூஜை செய்ய உகந்த நேரமாக கூறப்படுகிறது.