News August 2, 2024

விருதுநகர் மாவட்டத்தை கண்காணிக்க ஆணை

image

வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை கண்காணிக்கவும்,மழை நேரங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News October 16, 2025

அருப்புக்கோட்டையில் காய்ச்சல் முகாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று அருப்புக்கோட்டை காரையான்பட்டி தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது. மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

News October 16, 2025

தமிழகத்தில் அனுமதி கிடையாது – தங்கம் தென்னரசு

image

குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் இன்றைய சட்டப்பேரவையில் குமரி மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க வேண்டும் என கூறினார். குமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை என தமிழகத்தில் எந்த வகையிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கமாட்டோம் உறுதியளிக்கிறேன். மத்திய அரசு மக்களின் கருத்தை கேட்காமல் இதை நிறைவேற்றுவோம் என கூறுவதாக திருச்சுழி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

BREAKING விருதுநகருக்கு வானிலை மையம் எச்சரிக்கை

image

தமிழகம், கேரளா, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழையும், நாளை(அக்.17) தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!