News August 2, 2024
மலை மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க ஆணை

வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நீலகிரி, திண்டுக்கல் உள்பட 8 மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், மழை நாள்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அவசர தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், மழை நேரத்தில் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை துறை இணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 21, 2025
பிஹார் தேர்தலில் இருந்து பின்வாங்கிய ஹேமந்த் சோரன்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், RJD-யுடன் இணைந்து ஜார்கண்ட் CM ஹேமந்த் சோரனின் முக்தி மோச்சா கட்சி இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு சரியாக அமையாததால், தனித்து 6 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக ஹேமந்த் சோரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிஹார் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி சார்ப்பில் திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News October 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 21, ஐப்பசி 4 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 8:00 AM – 9:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News October 21, 2025
ஹரிஷ் கல்யாணம் படத்துக்கு ஜிவி பாராட்டு

‘பைசன்’, ‘டியூட்’ படங்களுடன் தீபாவளி ரேஸில் ஹரிஷ் கல்யாணின் டீசலும் களம் கண்டது. ‘பைசன்’,‘டியூட்’ படங்கள் வசூலை அள்ளி வரும் நிலையில் டீசல் சற்று பின்தங்கியுள்ளது. இந்நிலையில் ‘டீசல்’ படத்தை பார்த்து ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என அவர் பதிவிட்டுள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்ற பெயரை ஹரிஷ் தக்க வைத்துள்ளார்.


