News August 2, 2024

சென்னையில் இன்று இரவு 7 மணி வரை மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 13, 2025

சென்னை: 10th/ 12th/ ITI/ Diploma முடித்தவர்களா நீங்கள்?

image

Reliance Jio நிறுவனத்தில் Jio Fiber Engineer (JFE) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 18- 32 வயதுள்ள 10th/ 12th/ ITI/ Diploma முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,000-ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ந் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சென்னையில் வேலை தேடுவோருக்கு அருமையான வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

சென்னை அருகே சிறுவனை கத்தியால் தாக்கியவர் கைது

image

சாலிகிராமம் காந்தி நகரில், கணேஷ் என்பவரின் வீட்டில் வசிக்கும் பாஸ்கரன், லீசு பணம் ரூ.6 லட்சம் பெற்றும், மறுநாள் மீண்டும் பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. பின்னர், நேற்று கணேஷ் வெளியே சென்ற போது, அவரது மகனை கத்தியால் தாக்கி காயப்படுத்தினார். சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் R-5 விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கரனை இன்று கைது செய்தனர்.

News November 13, 2025

நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இயக்குநர்கள் ஸ்.ஏ சந்திரசேகர், ரவிகுமார் வீட்டிற்கும், நடிகைகள் சாக்ஷி அகர்வால், பிரியா பவானி சங்கர் வீட்டிற்கும் மிரட்டல் டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!