News August 2, 2024
குமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே சென்ற உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Similar News
News January 13, 2026
குமரி: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)
News January 13, 2026
குமரியில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன.15 முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சுற்றுலா மையங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, லெமூர் கடற்கரை, சொத்த விளை, சங்குத்துறை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மற்றும் பொது இடங்களில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News January 13, 2026
குமரி: இனி செல்போனில் ரேஷன் கார்டு

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <


