News August 2, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
போலி வாக்காளர்களை சேர்த்த திமுக அரசு: தமிழிசை

1947-ல் இருந்து 8 முறை நடந்த SIR பணிகளை எதிர்க்காத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது PM மோடியின் ஆட்சியில் மட்டும் எதிர்ப்பது ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். SIR பணிகள் மூலம் 2 ஆண்டுகளாக திமுக அரசு சேர்த்த போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்றும், அந்த அச்சத்தில் தான் அவர்கள் எதிர்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார். SIR-க்கு எதிராக போராடுவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று அவர் கூறியுள்ளார்.
News November 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 8, ஐப்பசி 22 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 07:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News November 8, 2025
இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்போம்: CPM

வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு உள்ளதாக, CPM அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்துவது என்ற ஒரு அம்சத்தில் மட்டும்தான் திமுகவுடன் கூட்டணியில் உள்ளதாகவும், மற்ற விஷயங்களில் மாறுபட்ட கொள்கைகளே உள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் CPM போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


