News August 2, 2024
‘நீலகிரியில் நிலச்சரிவு என்பது வதந்தி’

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் இந்த தகவல் தவறானது; வதந்தி என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் அவர், இது குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்யும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
நீலகிரி: தமிழ்க் கனவு நிகழ்ச்சியை துவக்கிய ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், உயர்கல்வித்துறை சார்பில், கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமையை உணர்த்தும் வகையில் இன்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு திறந்து வைத்தார்.
News August 20, 2025
நீலகிரி: இலவச பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!

நீலகிரி மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <
News August 20, 2025
நீலகிரி: ஆயுதப் படையினருக்கான சிறப்பு கலந்தாய்வு

நீலகிரி மாவட்டம் உவமையிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம், காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் பொதுவாக நடைபெறும். இதில் இன்று ஆயுதப் படையினருக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டமானது நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை எஸ்பியிடம் தெரிவித்தனர்.