News August 2, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அறிவிப்பு

image

செந்தில்பாலாஜி வழக்கில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரிய மனு மீது, இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ்

image

‘வைகை கரை காற்றே நில்லு’ என்ற பாடல் இன்றும் பஸ்களில் ஒலித்துக் கொண்டிருக்க, நம்மை அறியாமலே நாம் தாளம் போட்டு நினைவுகளால் உருகுகிறோம். அந்த அளவு தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘உயிருள்ளவரை உஷா’ படம் 4K தொழில்நுட்பத்தில் செப்டம்பரில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக அதன் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரீ ரிலீஸ் வரிசையில் ரெட்ரோ வகை படமும் தற்போது இணைந்துள்ளது.

News August 21, 2025

தவெக மாநாட்டில் மோர் குடிப்பவர்களே அலர்ட்

image

மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டில், உணவு விற்பனை படு ஜோராக நடந்துவருகிறது. குறிப்பாக தயிர், தக்காளி சாதம் ₹70- ₹80, வெஜ் பிரியாணி ₹100, கூழ் ₹50, தண்ணீர் பாட்டில் ₹40, கரும்பு ஜூஸ் ₹30, சாத்துக்குடி ஜூஸ் ₹50, ஐஸ்கிரீம் ₹70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், இலவசமாக கொடுப்பது போல மோரை கொடுத்து, ஒரு டம்ளர் ₹50 என சிலர் அடாவடியாக பணம் வசூல் செய்கின்றனராம்.

News August 21, 2025

BIG BREAKING: இந்த பொருள்கள் விலை குறைகிறது

image

GST வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க FM நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செல்போன், நெய், குடை, ஜாம், ஜூஸ் உள்ளிட்ட வகைகளுக்கு தற்போது 12% வரியும், பிரிட்ஜ், AC, சிறிய வகை கார்கள் உள்ளிட்ட பொருள்கள் 28% வரியிலும் இருந்த நிலையில் அவற்றில் மாற்றம் செய்யப்படவுள்ளன. இதனால், விரைவில் நாடு முழுவதும் பல பொருள்களின் விலை குறையவுள்ளது.

error: Content is protected !!