News August 2, 2024

புதிதாக 17 எய்ம்ஸ் மருத்துவமனை திறக்க முயற்சி

image

புதிதாக 17 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், மக்கள் அனைவரும் உயர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸுக்கு வர வேண்டிய நிலையை மாற்றுவதே அரசின் திட்டமென்றும், இதற்காக உலகின் சிறந்த மருத்துவ அமைப்பு கொண்ட எய்ம்ஸை நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் திறக்க பிரதமர் முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Similar News

News October 24, 2025

பிஹாரில் மோடி இன்று பரப்புரை

image

பிஹார் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், NDA, INDIA கூட்டணி தலைவர்கள் பம்பரம் போல், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராயில் இன்று நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.

News October 24, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் ₹3000 குறைந்தது..

image

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்த நிலையில், வெள்ளி விலை தலைகீழாக தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3 குறைந்து ₹171-க்கும், கிலோ வெள்ளி ₹3000 குறைந்து ₹1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ₹36,000 குறைந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் பலர் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

News October 24, 2025

விஜய் ரசிகர்கள் தற்குறிகள்: ஜி.பி.முத்து

image

பிள்ளை போனாலும் பரவாயில்ல, விஜய்யை பார்த்தோம் என கரூர் துயரில் பாதிக்கப்பட்ட பெற்றோர் பேசியதை ஜி.பி.முத்து விமர்சித்திருந்தார். அவரை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் விளாசினர். இந்நிலையில், தான் பேசியது சரி என ஜி.பி.முத்து பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே அவருடைய ரசிகர்கள்தான் எனவும் இப்படி பேசித்தான் அவர்கள் தற்குறி என பெயர் வாங்கியிருப்பதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!