News August 2, 2024

ஒரே நாளில் வெளியான 4 படங்கள்

image

சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள போட் உள்ளிட்ட 4 படங்கள் இன்று ரிலீஸ் ஆகியுள்ளன. இசைஞானி இளையராஜா இசையமைத்து, பாரி இயக்கியுள்ள ‘ஜமா’ படமும், விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. மேலும், நடிகை காயத்ரி, பாலா சரவணன் நடிப்பில் பேச்சி படமும் இன்று ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 16, 2025

சட்டப்பேரவையில் எதிரொலித்த ‘கிட்னி திருட்டு’

image

சட்டப்பேரவையில் ‘கிட்னி திருட்டு’ விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை இபிஎஸ் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், ஏழை விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடிய ஹாஸ்பிடல் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிட்னி மட்டுமின்றி கல்லீரலும் திருடப்பட்டுள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News October 16, 2025

இந்த வடிவங்களின் செய்தி தெரியுமா?

image

டிராபிக் போர்டின் வடிவம் சொல்லும் செய்தி தெரியுமா? பொதுவாக இந்திய சாலைகளில் 3 வடிவிலான டிராபிக் போர்டுகள் உள்ளன ★சிவப்பு வட்டம்: இது உத்தரவு சின்னம். கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் ★சிவப்பு முக்கோணம்: இது எச்சரிக்கை சின்னம். பள்ளம் இருப்பது, ரயில் தண்டவாளம் உள்ளது போன்ற எச்சரிக்கைகளை கொடுக்கும் ★நீலம் அல்லது பச்சை நிற செவ்வகம்: இது தகவல் அளிக்கும் போர்டு. SHARE IT.

News October 16, 2025

Trump-ஐ பார்த்து பயப்படுகிறார் மோடி: ராகுல் காந்தி

image

Trump-ஐ பார்த்து மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இது குறித்த X பதிவில், ரஷ்ய எண்ணெய் வாங்குவது தொடர்பாக டிரம்ப் முடிவெடுக்கவும், அறிவிக்கவும் மோடி அனுமதிப்பதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் பற்றிய டிரம்ப் கருத்துக்கு இதுவரை PM மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!