News August 2, 2024
Olympics 2024: ஹாட்ரிக் அடிப்பாரா மனு பாக்கர்?

இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இன்று 25மீ ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வெல்வாரா? எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே ஏர் ரைபிள் பிரிவில், ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைப்பார். அவர் பதக்கம் பெறுவாரா என்பதை கமெண்டில் கூறுங்கள்.
Similar News
News November 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். ▶பொருள்: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
News November 4, 2025
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும்

அதிகாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News November 4, 2025
கோவை கொடூரத்திற்கு போதை கலாசாரமே காரணம்: வைகோ

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த சம்பவம் ஒரு கொடூர நிகழ்வு என வைகோ தெரிவித்துள்ளார். தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தும் இத்தகைய குற்றங்களுக்கு மதுப்பழக்கமும், போதை கலாசாரமுமே அடிப்படையாக இருக்கின்றன என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவருக்கும் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


