News August 2, 2024
ரஷ்யாவின் 90 டிரோன்களை வீழ்த்திய உக்ரைன்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரியாக டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. அவற்றில் 90 டிரோன்களை அந்நாட்டின் வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இது இந்த ஆண்டின் மிகப்பெரிய தாக்குதல் என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக உக்ரைன் மீதான போரை ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
Similar News
News November 7, 2025
ரேஷன் அட்டைகளில் மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் அட்டைகளில் இனி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள முடியும். அதன்படி, ஜனவரி – ஜூன், ஜூலை – டிசம்பர் என இருமுறை மட்டுமே முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகிய பணிகளை செய்ய முடியும். புதிய ரேஷன் அட்டை பெற தனி சமையலறையுடன் வசிப்பவர்கள், ‘ஆதார்’ எண்ணுடன் உணவு வழங்கல் துறையின் <
News November 7, 2025
அடுத்த பட அப்டேட் கொடுத்த கமல்!

நீண்ட காலமாக, அன்பறிவு மாஸ்டர்களின் இயக்கத்தில் கமல் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அறிவிப்புடன் நின்ற, அப்படத்தின் புது அப்டேட்டை இன்று தனது பிறந்தநாளில் கமல் வெளியிட்டுள்ளார். RKFI தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கவுள்ளார். இது ஆங்கிலம் & பின்லாந்து மொழியில் வெளியான ‘சிசு’ படத்தின் ரீமேக்காக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
News November 7, 2025
Business 360°: கார் விற்பனையில் மாருதி சுசூகி சாதனை

*இந்தியாவில் 3 கோடி கார்களை விற்ற முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசூகி படைத்துள்ளது. *நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் பொதுத்துறை வங்கிகள் ₹49,456 கோடி லாபம் ஈட்டியுள்ளன. *செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி 60.9 புள்ளிகளாக பதிவு. *கூகுள் மீது ஆப்பிள் நிறுவனம் ₹9 ஆயிரம் கோடி முதலீடு. *தாமிரம் வாங்க தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா பேச்சு.


