News August 2, 2024
திண்டுக்கல்லில் தாய்ப்பால் வார விழா

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு குழந்தைகள் நல சிகிச்சை தலைமை மருத்துவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மேலும், தலைமை மருத்துவர் குணா முன்னிலை வகித்தார். இதில், தாய்ப்பாலின் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். இந்த விழாவில் மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 15, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், (சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News August 14, 2025
திண்டுக்கல்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 14, 2025
திண்டுக்கல்: உங்கள் ஊராட்சி வரவு செலவு கணக்கை பாருங்க!

திண்டுக்கல் மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய <