News August 2, 2024
பல்லாவரம் – கூடுவாஞ்சேரி ரயில் சேவை ரத்து

நாளை (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சென்னை – பல்லாவரம் இடையே மட்டும் ரயில் சேவை இயக்கப்படும். மேலே குறிப்பிட்ட நாட்களில், பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.
Similar News
News December 26, 2025
சென்னை: வீடு புகுந்து தாய்-மகனுக்கு வெட்டு!

சென்னை வியாசர்பாடியில் எஸ்.ஏ. காலனியைச் சேர்ந்த சூர்யா (19) என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கியது. இந்த சம்பவத்தின் போது மகனைத் தடுக்க முயன்ற தாய் சாந்திக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News December 26, 2025
கடும் பனிமூட்டம்: சென்னையில் ரயில் சேவை பாதிப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள் சற்று தாமதமாக வருகிறது. குறிப்பாக, மங்களூரு விரைவு ரயில், அசோகபுரம் காவிரி விரைவு ரயில் காலதாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதேபோல, பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் ரயில்களும் 15 நிமிடம் தாமதமாக வருகிறது.
News December 26, 2025
சென்னை: தோஷம் என்ற பெயரில் தங்க நகை திருட்டு

சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவைச் சேர்ந்த தீபக் ஜெயின் (29) மீது நேற்று அடையாளம் தெரியாத இருவர், தோஷம் இருப்பதாக கூறி வசியப்படுத்தி தங்க வளையல்களை திருடிச் சென்றனர். மந்திரம் சொல்லுவது போல் கையை பிடித்து, பேப்பரில் சுற்றி பையில் வைக்கச் சொல்லியபோது, 10 சவரன் வளையல்கள் பறிக்கப்பட்டன. மயக்கம் தெளிந்தபின் திருட்டு தெரியவந்தது. புகாரின் பேரில் கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


