News August 2, 2024

வத்தலக்குண்டு ஆலமரத்திற்கு கும்பாபிஷேகம்

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் மிகப் பழமையான ஆலமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஓடை முனியாண்டி கோயிலும் உள்ளது. இந்த ஆலமரத்திற்கு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்று யாக வேள்விகள் தொடங்கப்பட்டு புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆலமரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 10, 2026

திண்டுக்கல் மக்களே உடனே செக் பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

திண்டுக்கல்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

சீல் வைக்கப்பட்ட கடைகளால் பழனியில் பரபரப்பு!

image

பழநி ரெட் கிராஸ் ரோட்டில் உள்ள கட்டடத்தில் கடைகள் வீடுகள் உள்ளன.இதற்கு 10 ஆண்டுகளாக வரி செலுத்த வில்லை. இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள் கட்டடத்திற்கு வரிபாக்கி குறித்த நோட்டீஸ் ஒட்டி அதில் உள்ள கடைக்கு சீல் வைத்தனர்.நகராட்சி கமிஷனர் அறிக்கையில்,நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி,தொழில் வரி குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக செலுத்தி சட்ட ரீதியான நடவடிக்கை தவிர்க்க கேட்டுள்ளார்.

error: Content is protected !!