News August 2, 2024
பூச்சி மருந்து குடித்து மாணவர் பலி

கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் B.Com மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News January 14, 2026
பெரம்பலூர்: பொங்கல் விழாவிற்கு ஆட்சியர் அழைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள திடலில், ஜன.15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த கலை விழாவை பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கண்டுகளிக்க மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.

News January 13, 2026
பெரம்பலூர்: சனி தோஷம் நிவர்த்திக்கு சோளீசுவரர் கோயில்

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க.