News August 2, 2024
கடனை செலுத்தாததால் மகன் கடத்தல்

ஆந்திராவில் கடன் தொகையை செலுத்தாததால் சம்பந்தபட்டவரின் மகனை, தனியார் நிதி நிறுவன முகவர்கள் கடத்திச் சென்றனர். ₹60,000 திரும்ப கொடுத்தால் தான் மகனை மீட்க முடியும் எனவும், குடும்பத்தில் இருந்த பெண்ணிடம் அத்துமீறியதாகவும் கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் ராஜேஷ்வரி புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நிறுவனத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என மேலாளர் ராமாராவ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
வாக்கு திருட்டு விவகாரம்: திமுக ம.செ., கூட்டத்தில் கண்டனம்

வாக்கு திருட்டு விவகாரம், பிஹார் வாக்காளர் பட்டியல் முறைகேடு உள்ளிட்டவைக்கு, திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியுள்ளது. CM ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
News August 13, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

கேள்விகள்:
1. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு அமலாக்கப்பட்டது?
2. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?
3. EXAM முறையை கண்டுபிடித்தவர் யார்?
4. உடலில் ரத்தம் பாயாத பகுதி எது?
5. தாவரங்கள் காற்றிலிருந்து எந்த வாயுவை உறிஞ்சுகின்றன?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2news App-ல் வெளியிடப்படும்.
News August 13, 2025
இனிமேல் ₹24க்கே ஆன்லைனில் ITR தாக்கல் பண்ணலாம்

ஜியோ பைனான்ஸ் செயலியில் புதிய வரி திட்டமிடல் (tax planning) மற்றும் ITR தாக்கல், தற்போது புதிய அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு சரியான வரி முறையை ( பழைய – புதிய வரி) தேர்வு செய்யவும், குழப்பங்களை குறைக்கவும், மலிவு விலையில் தாங்களாகவோ அல்லது நிபுணர் உதவியுடனோ வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்யவும் உதவுகிறது. இந்த திட்டம் வெறும் ₹24 முதல் ஆரம்பமாகிறது.