News August 1, 2024
காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 290 நபர்களை இழந்து உள்ளதால் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கிழக்கு ராஜா கோபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆன்மா சாந்தி அடைய சங்கர மாதத்தில் மடாதிபதி விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோளுக்கிணங்க மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
Similar News
News August 28, 2025
காஞ்சிபுரத்தில் அரசு வேலை! நாளை கடைசி நாள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 49 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <
News August 28, 2025
காஞ்சியில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539569>>தொடர்ச்சி<<>>
News August 28, 2025
காஞ்சி: பெண் பிள்ளை உள்ளதா? உடனே விண்ணப்பியுங்கள் (2/2)

இந்த திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)