News August 1, 2024
ஊட்டியில் மாவட்ட அளவு தடகள போட்டி

நீலகிரி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்தியில், மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி ஆக.21ம் தேதி ஊட்டி எச்.ஏ.டி.பி. திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அதில் 14, 16, 18, 20 வயதிற்கு உட்பட்ட ஆண் – பெண் இருபாலரும் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் – 94430 66112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Similar News
News August 15, 2025
உதகையில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளை கௌரவிக்கும் விதமாக பதக்கங்கள், மற்றும் சான்றிதழ்களை, வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.
News August 15, 2025
காந்தி சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள, காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., இன்று மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதிஷ், உதகை நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.
News August 15, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிக்கான கால அவகாசம் வருகின்ற 20.8.2025 மாலை 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் இந்த விளையாட்டு போட்டிகளுக்கு ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்ய விரும்புவர்கள் பதிவு செய்யலாம். என நீலகிரி மாவட்ட மக்கள் தொடர்பு மற்றும் செய்தி துறையின் சார்பாக அறிவித்துள்ளனர்.