News August 1, 2024
மனு பாக்கர் பெயரின் ரகசியம்

சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவாக, ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பெயர் சூட்டியதாக அவரது பாட்டி தயா கவுர் தெரிவித்துள்ளார். மனு பாக்கரின் தாயார் ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ஜான்சி ராணி லட்சுமி பாய் கதைகளால் அதிகம் ஈர்க்கப்பட்டதாகவும், அதனால் அவரது செல்ல பெயரான மனு என்பதை தனது பேத்திக்கு சூடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 13, 2025
AI-யால் செய்யவே முடியாத வேலைகள்..பட்டியல் இதோ!

AI-யால் வேலை பறிபோகும் அச்சம் மக்களிடையே இருக்கிறது. அந்த வகையில் AI-யால் செய்யவே முடியாத வேலைகளின் பட்டியலை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது. செவிலியர், ரத்த மாதிரிகளை எடுப்பது, தீயணைப்பு பணி, எலக்ட்ரிஷியன் பணி, கப்பல் பொறியாளர் போன்ற வேலைகளை AIயால் செய்யமுடியாதாம். சில வேலைகளில் மனிதர்களின் பங்கும் வேண்டும் என்பதால் AI-யால் முற்றிலுமாக அதனை செய்யமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
உருவானது காற்றழுத்தம்.. கனமழை வெளுக்கும்!

வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. அது நாளை மேலும் வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாள்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
News August 13, 2025
பிக் பாஸில் பஹல்காமில் கணவரை இழந்த பெண்!

இந்தியில் விரைவில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி நர்வால் பங்கேற்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்னும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது நெட்டிசன்களிடையே கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் கேரக்டர் விமர்சிக்கப்படுவதால், இவர் கலந்து கொள்ள வேண்டுமா என வினவுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?