News August 1, 2024
பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்தது

முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், நேற்று வினாடிக்கு 5,339 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 3,265 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.15 அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1355 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 4,966 மில்லியன் கன அடியாக உள்ளது.
Similar News
News November 9, 2025
தேனி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News November 9, 2025
தேனி அருகே கத்தியால் குத்திக் கொலை

வீரபாண்டி பகுதியை சோ்ந்தவா் விக்னேஷ் (25). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று (நவ.8) தனது வீட்டில் அதே பகுதியை சோ்ந்த நண்பா்களான யுவராஜா, அபிஷேக் ஆகியோருடன் சோ்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் யுவராஜா, விக்னேஷை கத்தியால் குத்தியுள்ளார். இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வீரபாண்டி போலீசார் யுவராஜா, அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர்.
News November 9, 2025
தேனி: ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருது மற்றும் பரிசுத்தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் தேனி மாவட்ட விவசாயிகள் போட்டி கட்டணமாக ரூ.150 செலுத்தி மார்ச்.31.க்குள் பதிவு செய்ய வேண்டும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். SHARE IT


