News August 1, 2024
மாவட்ட பஞ்சாயத்துக்கு புதிய அலுவலகம் தயார்

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் பாளை கேடிசி நகரில் இயங்கி வந்தது. மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் & அலுவலக ஆய்வு கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக இந்த அலுவலகத்தில் வசதிகள் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் திறக்கத் தயாராக உள்ளது.
Similar News
News September 12, 2025
நெல்லை: பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் சஸ்பெண்ட்

தருவை அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் குரு விநாயகம் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.இந்த மனுவின் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில் ஆசிரியர் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததால் இன்று முதன்மை கல்வி அதிகாரியால் பணி நீக்கம் செய்யபட்டார்.
News September 12, 2025
நெல்லை: வாய்க்காலில் விழுந்தவர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சிங்கி குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருணாநிதி நேற்று முன்தினம் இரவில் மேலகரை பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் தவறி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் தண்ணீர் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 12, 2025
நெல்லையில் ஒத்த கையில் அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவர்

திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியிருக்கிறார். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பயணிகள் இந்த ஓட்டுநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.