News August 1, 2024
வெள்ளி விலை ஒரே நாளில் ₹700 உயர்வு

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை இரண்டாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ₹91.70க்கும், கிலோ வெள்ளி ₹700 உயர்ந்து ₹91,700க்கும் விற்பனையாகிறது. மத்திய பட்ஜெட்டையொட்டி கடந்த 25ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி ₹89,000 வரை குறைந்த நிலையில், தற்போது படிப்படியாக மீண்டும் உயர்ந்து வருகிறது. அதன்படி, 2 நாள்களில் மட்டும் ₹2,700 அதிகரித்துள்ளது.
Similar News
News August 16, 2025
மசோதாக்கள் ஒப்புதலுக்கு காலக்கெடு: மத்திய அரசு பதில்

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலம் தாழ்த்துவது குறித்து TN அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ஜனாதிபதி, கவர்னர்களுக்கு SC காலக்கெடு விதித்தது. இதற்கு எதிராக ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாதத்தில், ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
News August 16, 2025
BREAKING: நாளை கூட்டணியை அறிவிக்கிறார் ராமதாஸ்

நாளை திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். பொதுக்குழுவில் 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி, கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. திமுகவை அட்டாக் செய்யும் அன்புமணி, அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய விரும்பும் நிலையில், ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், நாளை அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
News August 16, 2025
தங்கம் வென்றார் இந்தியாவின் அங்கிதா தியானி

Grand Slam Jerusalem 2025 போட்டிகள் இஸ்ரேலில் நடைபெற்று வருகின்றன. இதில் Steeplechase 2,000 பந்தயத்தில், இந்தியாவின் அங்கிதா தியானி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த இலக்கை அவர் 6:13:92 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பருல் சவுத்ரியின் முந்தைய சாதனையை (6:14:38) அங்கிதா முறியடித்துள்ளார். ஆசிய அளவில் இரண்டாவது வேகமான ஓட்டம் இதுவாகும். இவருக்கு வாழ்த்து கூறலாமே..