News August 1, 2024
சிறப்பு கைத்தறி கண்காட்சி; கலெக்டர் அறிவிப்பு

10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் சூரியம்பாளையம், “செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து திருமண மண்டபத்தில்” சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம் 7ம் தேதி நடைபெறவுள்ளது. ஆகவே பொதுமக்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
நாமக்கல் மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04286-281100
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️பி.எஸ்.என்.எல் உதவி எண் – 1500
▶️தேர்தல் விசாரணை – 1950
▶️கட்டணமில்லா தொலைபேசி எண் – 1800 425 1997. SHARE பண்ணுங்க..!
News September 1, 2025
ரூ.26¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று 50 3/4 டன் காய்கறிகள் மற்றும் 12 1/2 டன் பழங்கள் என மொத்தம் 63 3/4 டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 495-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 12 ஆயிரத்து 638 பேர் வாங்கி சென்றனர்.
News September 1, 2025
நாமக்கல் மாவட்டம் உருவான வரலாறு..!

01-01-1997ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது நாமக்கல் மாவட்டம். இம்மாவட்டத்தின் எல்லைகள் வடக்கில் சேலம், தெற்கில் கரூர், கிழக்கில் திருச்சி மற்றும் சேலம் மற்றும் மேற்கில் ஈரோடு அமைந்துள்ளது.நாமக்கல்லில் உள்ள பாறை கோட்டை இந்த ஊரின் சிறப்பு அம்சமாகும். முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடத்தில் உள்ளது. எனவே, “முட்டை நகரம்” என்று அழைக்கப்படுகிறது. (SHAREit)