News August 1, 2024
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி பிரமுகர் சித்திக் வீட்டிலும், திருவாரூர் முத்துப்பேட்டையில் வழக்கறிஞர் ராஜ்முகமது வீட்டிலும் சோதனை நடக்கிறது. தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News August 18, 2025
பிறப்பு மட்டுமே இல்லாத ஒரு போர்வீரன்!

‘ரத்தத்தை கொடுங்கள்.. நான் விடுதலை பெற்றுக் கொடுக்கிறேன்’ என முழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலகின் கண்களில் இருந்து மறைந்த தினம் இன்று. அவரால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் இந்திய தேசிய ராணுவத்தில்(INA) இணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினர். ஆகஸ்ட் 18, 1945-ல் தைவானில் விமான விபத்தில் நேதாஜி மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இன்றும் அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
News August 18, 2025
துணை ஜனாதிபதி தேர்தல்.. திமுகவுக்கு புதிய நெருக்கடி

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவருக்கு உங்களின் ஆதரவு இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். CPR-க்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், தமிழரை திமுக புறக்கணித்து விட்டதாக சட்டப்பேரவைத் தேர்தலின்போது NDA பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.
News August 18, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. சூரியக் குடும்பத்தின் மையத்தை கண்டிபிடித்தவர் யார்?
2. சங்க இலக்கியங்களில் வரலாற்றுச் செய்திகளை அதிகமாக கூறும் நூல் எது?
3. சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் சிக்கிய ஆண்டு எது?
4. ‘சரிகமபதநிச’ என்ற ஸ்வர வரிசை எந்த ராகத்தை குறிக்கிறது?
5. அழகான பெண்ணுக்கு அதிசய வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.. அவள் யார்?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.