News August 1, 2024

மத்திய அமைச்சரிடம் கடலூர் எம்பி மனு

image

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து மனு அளித்தார். அதில் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத், தேஜாஸ் மற்றும் ஹம்சபார் விரைவு ரயில்கள் நின்று செல்லவும், விழுப்புரம்- தாம்பரம் பயணிகள் ரயிலை விருதாச்சலம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Similar News

News November 11, 2025

கடலூர்: சாலையோரம் பிணமாக கிடந்த நபர்

image

கடலூர் புதிய பைபாஸ் சாலையில் நேற்று இரவு ராமாபுரம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் டூவீலருடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உடலை கைப்பற்றிய போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி உயிரிழந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 11, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

image

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <>Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!