News July 31, 2024
ஒரே நாளில் 26 காவலர்கள் ஓய்வு

சென்னை காவல் துறையில் பணி புரிந்த 1 கண்காணிப்பாளர், 14 காவல் உதவி ஆய்வாளர், 10 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 26 பேர் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அவர்களை சென்னை காவல் ஆணையாளர் அருண் சால்வை, மாலை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
Similar News
News September 20, 2025
சென்னை மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் சேவைகள் அனைத்தையும் இப்போது நீங்கள் உங்கள் செல்போன் மூலமாகவே பெறமுடியும். பெருநகர சென்னை மாநகராட்சியின் WhatsApp சேவை மூலம் 32க்கும் மேற்பட்ட சேவைகளை எளிதில் பெறலாம். “வணக்கம்” என்று 9445061913 என்ற எண்ணிற்கு தகவல் அனுப்பி உடனே சேவையை பெறலாம். சென்னையில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள்.
News September 20, 2025
சென்னையில் மெட்ரோ QR டிக்கெட் சேவை பாதிப்பு

சென்னை மெட்ரோ ரயில் QR டிக்கெட் பெறுவதில் இன்று காலை முதல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே நேரடியாக கவுண்டர்கள் மற்றும் வாட்ஸப் செயலி மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும், சி.எம்.ஆர் அட்டைகள் மூலமாகவும் பயணிக்கலாம் எனவும், நுட்ப வல்லுனர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
News September 20, 2025
சென்னை: 10th பாஸ் போதும்…காவல்துறையில் வேலை!

தமிழ்நாடு காவல்துறையில் கான்ஸ்டபிள், சிறைக் காவலர், போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த <<-1>>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை தேடுவோருக்கு ஷேர்.