News July 31, 2024
தயிர் உடலுக்கு நல்லதா?

சாப்பாட்டில் தயிர் சேர்ப்பது நல்லதா? கெட்டதா? என பலருக்கும் சந்தேகம் இருப்பதுண்டு. அதற்கு மருத்துவ ஆலோசகர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளை காணலாம். தயிரை உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தயிரை சரியான முறையில் உணவில் சேர்த்தால், உடல் எடை குறையும் என்றும், பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றை குறைக்கும் என்றும் கூறுகின்றனர்.
Similar News
News August 14, 2025
இந்தியர்கள் சிறுநீர் கழித்தாலே. BJP தலைவர் கிண்டல்

சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியாவிற்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று பாக்., PM ஷெபாஸ் ஷெரிஃப் கூறியிருந்தார். இந்நிலையில், 140 கோடி இந்தியர்களும் சிறுநீர் கழிக்கும் வகையில் ஒரு அணையைக் கட்டி, அதைத் திறந்தாலே பாக்.,கில் சுனாமி ஏற்பட்டுவிடும் என BJP தலைவர் மிதுன் சக்கரவர்த்தி ஆவேசமாக கூறியுள்ளார். பாக்., மக்களிடம் தனக்கு எந்த விரோதமும் இல்லை என்ற அவர், இதை பூட்டோவுக்காக சொன்னது என்றார்.
News August 14, 2025
ஆசிய கோப்பை 2025: 5 வீரர்களுக்கு வாய்ப்பு குறைவு

ஆசிய கோப்பை 2025 டி20 தொடர் செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்துவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், IPL 2025-ல் ஜொலித்த 5 வீரர்கள் அணியில் தேர்வாவதற்கான வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. சாய் சுதர்சன் (GT), ஷ்ரேயஸ் ஐயர் (PBKS), பிரசித் கிருஷ்ணா (GT), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR), க்ருணால் பாண்ட்யா (RCB) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.
News August 14, 2025
2026 தேர்தலில் திமுக சார்பில் சூர்யா போட்டி?

கொங்கு மண்டலத்தில் ADMK- BJP கூட்டணி வலுவாக இருக்கிறது. இதனால், அக்கூட்டணியை வீழ்த்த, 2026-ல் நடிகர் சூர்யாவை களமிறக்க திமுக முயற்சித்து வருவதாக பிரபல செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, விஜய் வருகையால் கொங்கு மண்டலத்தில் திமுக வாக்கு சரியலாம் என்பதால், அதே பகுதியை சேர்ந்த சினிமா வெளிச்சத்தில் இருக்கும் சூர்யாவை களமிறக்கினால், திமுக வெற்றிக்கு உதவும் என ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.