News July 31, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

நாகை மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சம்பா சாகுபடி முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
Similar News
News August 16, 2025
நாகையில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <
News August 16, 2025
50% மானியம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் கீழையூர் மற்றும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஏழை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று 79வது சுதந்திர தின விழா நடைப்பெற்றது. இவ்விழாவில், நாகை மாவட்டத்தில் தீயணைப்பு துறை வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 172 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பவனந்தி, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.