News July 31, 2024
தாமதமான ரயில்களால் பயணிகள் அவதி

கேரளாவில் மழை பெய்து வருவதால் திண்டுக்கல்லுக்கு காலை 8 மணிக்கு வரவேண்டிய திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு வந்தது காலை 9 மணிக்கு வரவேண்டிய பாலக்காடு திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11 மணிக்கு வந்தது. இதனால் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பயணிகள் அவதியடைந்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் முறையான அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.
Similar News
News August 6, 2025
பூம்பாறை மலை கிராம மாணவர் மருத்துவம் படிக்க தேர்வு

கொடைக்கானல், பூம்பாறை மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் யாதேஷ் அரசுப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 525 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார், மேலும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தற்போது தேர்வாகியுள்ளார், இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணவர் யாதேஷ்சை வாழ்த்தி வருகின்றனர்.
News August 5, 2025
திண்டுக்கல்: NO Exam ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 5, 2025
திண்டுக்கல்லில் தங்கத்துடன் இலவச திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்க உள்ளனர். இந்தத் திட்டத்தின் படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!