News July 31, 2024
விபத்தில் இறந்த ஆசிரியையின் கணவரும் உயிரிழப்பு

சேரன்மகாதேவி அடுத்த வேலியார்குளத்தை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர்(52). இவரது மனைவி அன்புச்செல்வி(50). ஆசிரியையான இவரை கடந்த 18ஆம் தேதி கிறிஸ்டோபர் பள்ளியில் விடுவதற்கு பைக்கில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் அன்புச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கிறிஸ்டோபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News July 11, 2025
நெல்லை:பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

நெல்லை மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வரும் 12ம் தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம். இதற்கான உரிய ஆவணங்களை மக்கள் கொண்டு சென்று பயன்பெறலாம் என ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
பாதிரியாரிடம் பணம், செல்போன் பறித்த கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அருள் சீலன், தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரினச் சேர்க்கையாளர் கும்பலால் தாக்கப்பட்டு, அவரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய், செல்போன், ஏடிஎம் கார்டுகள் பறிக்கப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில், கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
News July 10, 2025
சிறுவன் மரணத்தில் பொய்யான தகவல் பரப்பினால் நடவடிக்கை

வடக்கன்குளம் பள்ளி விடுதியில் 7-ம் வகுப்பு மாணவன் சேர்மதுரை 8ம் தேதி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். பணகுடி போலீசார் விசாரணையில், நீரில் மூழ்கியதால் பலி என உறுதியானது. பெற்றோர் புகாரின் பேரில் விடுதி காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பணப் பேரம் குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை மறுத்து, அவதூறு பரப்புவோர் மீது எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.