News July 31, 2024
மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 4,829 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் 4 இடங்களில் நேற்று(ஜூலை 30) நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 3 ஆயிரத்து 562 மனுக்களும், நகா்ப்புறங்களில் நடைபெற்ற முகாம்களில் ஆயிரத்து 267 மனுக்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 829 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
Similar News
News July 8, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம்

தி.மலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
அண்ணாமலையார் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் புகைப்படம் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தரிசனத்திற்காக இடைத்தரகர்கள் மற்றும் பிறரிடத்தில் பணம் தரக்கூடாது எனவும், பணம் வழங்கும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
News July 8, 2025
வீட்டு வாடகை ஒழுங்குமுறை சட்டம் சொல்வது என்ன? (2/2)

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கான புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்.